Wednesday, 23 December 2015

சித்தர்கள் சொன்னவை - 3

பெண்மாயை தீர ,ஆன்மீகத்தில் உயர்வு உண்டாக அகஸ்தியர் கூறும் ரகசியம் :-


மூலாதாரத்தில் மனம் வைத்து

"ஓம் அங் உங் அவ்வும் உவ்வும் ஸ்ரீம் சிவாய கங் கணபதயே நமா "

என்று 1008 உரு 48 நாட்கள் ஜெபித்து வர மூலாதாரத்தில் ஒளி உண்டாகும். அதன் பலனாக பெண்மாய்கையான காமம் எந்நாளும் தோன்றாது ,யோக உயர்வுக்கும் வழிவகுக்கும் என்று அகஸ்தியர் பூஜாவிதி 200 என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.




                   வாழ்க வையகம்!!   வாழ்க வளமுடன்!!

M.சூர்யா தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Monday, 21 December 2015

சித்தர்கள் சொன்னவை - 2

அஷ்ட கணபதி மந்திர தீட்சை 


சித்தர்கள் மணி,மந்திரம்,ஔஷதம் என்ற மூன்று கலைகளிலும் வல்லவர்கள்.அவர்களின் கூற்றுப்படி, அவர்களின் துறையில் வெற்றி கிட்ட விநாயகர் மந்திரம் ,அன்னை ஸ்ரீ வாலைபரமேஸ்வரி 
மந்திரம், பஞ்சாட்சர மந்திரம் இவற்றில் சித்தியடைதல் அவசியம்.


முதலில் கணபதி மந்திர சித்தி பற்றிப் பார்க்கலாம்.அகஸ்தியர் தனது   வாத சௌமியம் 1200 என்ற சுவடியில் கூறியுள்ளவை.


அஷ்ட கர்மங்களுக்கும் ஒவ்வொரு விதமான கணபதி வழிபாடும் அதன் சித்தி முறைகளையும் வரிசையாகக் கூறிப்  பின் இறுதியாக  அஷ்ட கணபதிகளும் ஒருங்கே நின்று சிறப்பான முறையில் அருள் செய்யும் அஷ்ட கணபதி மந்திரம் பற்றி கூறுகிறார்.


அஷ்ட கணபதி மந்திரம்:

ஓம் கிலி அங் உங் 


இம்மந்திரத்தை அமாவாசை அன்று அல்லது உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாள் பார்த்து ஜெபிக்கத் துவங்கவும்.

சித்தர்கள் வழியில் பயணிக்க விரும்பும் யாவரும் அசைவ உணவை அறவே தவிர்த்தல் வேண்டும்.

கிழக்கு முகமாய் அமர்ந்து ஜெபிக்கவும்.வெள்ளை நிற விரிப்பில் அமர்ந்து ஜெபிக்கவும்.

ஸ்படிகம்,அல்லது ருத்ராக்ஷம் மாலை ஜெபத்திற்கு பயன்படுத்தலாம்.


இம்மந்திரத்தை லக்ஷம் உரு ஜெபித்தால் சித்தியாகி விடும்.ஜெபம் செய்து வரும் காலத்தில் கனவில் யானைகள் வந்து உங்களித் துரத்துவது போல் அல்லது உங்களுடன் விளையாடுவது போல் தின்றலாம்.உங்கள் அருகில் உறங்குபவர்களுக்கு இவையான அனுபவம் ஏற்படலாம். இது மந்திரம் சித்தியாகி வருகிறது என்பதைக் குறிக்கும்.நபருக்கு நபர் அனுபவம் மாறலாம்.

லக்ஷம்  உரு  ஜெபம் செய்து முடித்த பின் தனக்கோ பிறருக்கோ இம்மந்திர சக்தியால் அதிக நன்மையான பல காரியங்களை செய்யலாம்.


இடது உள்ளங்கையில் விபூதி  பரப்பி அதில் வலது கை மோதிர விரலால் என்ற பிள்ளையார் சுழி போட்டு  ஓம் கிலி அங் உங்  என்று 108 உரு ஜெபித்து விபூதி பூச சுரம்,ஜனனி,குன்மம்,காசம்,வஞ்சனை,ஏவல்,விஷம்,தோஷம், கரப்பான்,கர்ப்பரோகம்,வயிற்றுவலி மற்றும் சர்வ பீடைகளும் தீரும்.


கணபதி மந்திர சித்தி பெறாமல் வேறு எந்த தெய்வத்தின் மந்திர சித்தி பெற்றிருந்தாலும் அது சித்துக்களையும் சக்திகளையும் தந்து அகந்தை அதிகரிக்கச் செய்து ஒழுக்கம் கெட வைத்துப் படுகுழியில் தள்ளிவிடும்.  
  


                   வாழ்க வையகம்!!   வாழ்க வளமுடன்!!

M.சூர்யா தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

Saturday, 17 October 2015

உடல் எடை குறையவும் உடல் பலமாக விளங்கவும் உடற்பயிற்சி


இந்தப்  பயிற்சியைத்  அதிகாலையில்  அல்லது  உண்டபின் இரண்டரை மணிநேரம் கழித்து செய்து வரவும்.ஒரே முயற்சியில் தொடர்ந்து  10 தடவையாக  4 சுற்று செய்யலாம்.அல்லது ஒரே முயற்சியில் தொடர்ந்து 15 தடவையாக  4 சுற்று செய்யலாம்.மிக விரைவில் உடல் எடை குறைவதுடன் தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளும் பலமாக விளங்கும்.இதைச்  சீனாவில் பெரும்பாலான தற்காப்புக் கலைஞர்கள் செய்து வருகின்றனர். நானும் இதை செய்து கடந்த 8 ஆண்டுகளாக என் உடல் எடையை 58 முதல் 60 கிலோவுக்குள் வைத்திருக்கிறேன்.        






 STEP:1


 STEP:2
  STEP:3
  STEP:4
  STEP:5
  STEP:6






வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 
சூர்யா 
தச்சநல்லூர் 
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

Sunday, 15 March 2015

சித்தர்கள் சொன்னவை - 1

               சத்குரு ஸ்வகுரு ஓம்  ஸ்ரீ ஸ்ரீ அகஸ்த்ய குருப்யோ நமஹ

            சத்குரு பத்னி  அன்னை ஓம் ஸ்ரீ ஸ்ரீ லோபாமுத்ராயை நமஹ  





சித்தர்கள் சொன்னவை  - 1

இறைவன் ஒருவன் உள்ளான் என்பதும் அவன் எங்கும் உள்ளான் என்பதும்  நமக்கு வெறும் வார்த்தை.ஆனால் சித்தர்களுக்கு அதுவே வாழ்க்கை.நமக்கு வெறும் அறிவு ஆனால் சித்தர்களுக்கு அனுபவம்.எல்லா ஜீவராசிகளிலும் இறைவன் விதை வடிவமாக மறைந்து  குடி கொண்டிருக்கிறான் ஆனால் மனிதனில் மட்டுமே அவன் விருட்சமாகி வெளிப்படுகிறான் என்றாலும் சித்தர் பெருமக்கள் இறைவன் என்ற விதையைத் தவம் என்ற நீர் ஊற்றி வளர்த்து அவனை விருட்சமாக, விஸ்வரூபமாகக்  கண்டு உணர்ந்தவர்கள்.

எல்லாப் படைப்புகளின் நிரந்தரமான தேடுதல் இறைவனை அறிந்து இறையனுபவம் பெற்று அவனோடு ஒன்றுவதே.

யுகம் உள்ளவரைத் தாங்கள் பெற்ற பெரும் பேரை வருங்காலச் சந்ததிகள் யாவரும் பெற்று நலம் பெற வேண்டி அந்த யோக,ஞான,சித்த ரகசியங்களைப் பாடல் வடிவில் அருளியுள்ளார்கள்.அந்தப் பாடல்களில் பல பரிபாஷை எனப்படும் மறைபொருளாய் உள்ளவை .அவற்றின் உட்கருத்தை உணர அவர்களின் திருவருள் தேவை .இறை தேடுவதோடு இறைவனையும்   தேடுபவர்கள் யுகம் உள்ளவரை இருப்பார்கள் அவர்களுக்கு உதவ எப்போதும் சித்தர்கள் தயாராகவே  இருக்கிறார்கள் ,அவர்களின் உதவி எந்த விதத்திலாவது கிடைக்கும். அவர்களின் காலடிச்சுவடுகளைப் பின்பற்றி அவர்கள் சொன்ன பாதையில் நடந்து  நாமும் இறைவனை அடைய அவர்கள் அருளிச் செய்த ஆன்மீக,யோக வழிமுறைகள்,வாழ்க்கை மற்றும் ஆன்மிகம் சார்ந்த தத்துவங்கள் இவற்றைப்  பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து எல்லோரும் ஆன்ம உயர்வு பெற இறையருளையும் ,சித்தர்கள்,ரிஷிகள் குருமகான்களின் அருளாசிகளையும் வேண்டி இந்தப்  பதிவைச் சித்தர்கள் சொன்னவை என்ற பெயரில் துவங்குகிறேன் .இது  பாகம் ஒன்று இரண்டு என ஒவ்வொன்றாக வெளிவரும்.

பதினெண்  சித்தர்கள்  காப்பு பாடல் :-

நந்தி அகத்தியர்மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
கந்திடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார் கொங்கணர் காலாங்கி அன்பிற்
சிந்தில் அழுகண்ணர் அகப்பையர் பாம்பாட்டி
தேரையரும் குதம்பயைருஞ் சட்டைநாதர்
செந்தமிழ்ச் சீர்சித்தர் பதினெண்பேர் பாதம்
சிந்தையுண்ணிச் சிரத்தணியாச் சேர்த்தி வாழ்வாம்.

நந்தீசர், அகத்தீசர், திருமூலர், புண்ணாக்கீசர்,புலத்தீசர்,பூனைக்கண்ணார், இடைக்காடர், போகர், புலிப்பாணி , கருவூரார்,கொங்கணவர், காலாங்கிநாதர், அழுகண்ணர், அகப்பைச் சித்தர், பாம்பாட்டி சித்தர், தேரையர் ,குதம்பைச் சித்தர்,சட்டை முனிவர் பதினெட்டு சித்தர்களும் அவர்களில் முதன்மையானவர்கள். 



சித்தர்கள் எண்ணற்றவர்கள் யுகம் உள்ளவரைத் தோன்றிய வண்ணம் இருப்பார்கள் என்றாலும் அவர்களில் பதினெட்டுச் சித்தர்கள் முதன்மையானவர்கள்.பதினெட்டுச் சித்தர்களும் மேலும் பல சித்தர்களும் அருளியுள்ள ஆன்மீக ரகசியங்களைப் படிப்படியாக பார்க்கலாம்.
           
                   வாழ்க வையகம்!!   வாழ்க வளமுடன்!!

M.சூர்யா தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

நன்றாகப் படிக்க நினைவாற்றல் பெருக

ஒரு சிகப்புத் துணியில் கொஞ்சம் பெருஞ்சீரகம் வைத்து முடிந்து அதைத் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வர படிப்பில் நாட்டமும் ,நினைவாற்றலும் அதிகரிக்கும்.







          வாழ்க வையகம்     வாழ்க வளமுடன் 

M.சூர்யா -  தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com