சத்குரு ஸ்வகுரு ஓம் ஸ்ரீ ஸ்ரீ அகஸ்த்ய குருப்யோ நமஹ
சத்குரு பத்னி அன்னை ஓம் ஸ்ரீ ஸ்ரீ லோபாமுத்ராயை நமஹ
சித்தர்கள் சொன்னவை - 1
இறைவன் ஒருவன் உள்ளான் என்பதும் அவன் எங்கும் உள்ளான் என்பதும் நமக்கு வெறும் வார்த்தை.ஆனால் சித்தர்களுக்கு அதுவே வாழ்க்கை.நமக்கு வெறும் அறிவு ஆனால் சித்தர்களுக்கு அனுபவம்.எல்லா ஜீவராசிகளிலும் இறைவன் விதை வடிவமாக மறைந்து குடி கொண்டிருக்கிறான் ஆனால் மனிதனில் மட்டுமே அவன் விருட்சமாகி வெளிப்படுகிறான் என்றாலும் சித்தர் பெருமக்கள் இறைவன் என்ற விதையைத் தவம் என்ற நீர் ஊற்றி வளர்த்து அவனை விருட்சமாக, விஸ்வரூபமாகக் கண்டு உணர்ந்தவர்கள்.
எல்லாப் படைப்புகளின் நிரந்தரமான தேடுதல் இறைவனை அறிந்து இறையனுபவம் பெற்று அவனோடு ஒன்றுவதே.
யுகம் உள்ளவரைத் தாங்கள் பெற்ற பெரும் பேரை வருங்காலச் சந்ததிகள் யாவரும் பெற்று நலம் பெற வேண்டி அந்த யோக,ஞான,சித்த ரகசியங்களைப் பாடல் வடிவில் அருளியுள்ளார்கள்.அந்தப் பாடல்களில் பல பரிபாஷை எனப்படும் மறைபொருளாய் உள்ளவை .அவற்றின் உட்கருத்தை உணர அவர்களின் திருவருள் தேவை .இறை தேடுவதோடு இறைவனையும் தேடுபவர்கள் யுகம் உள்ளவரை இருப்பார்கள் அவர்களுக்கு உதவ எப்போதும் சித்தர்கள் தயாராகவே இருக்கிறார்கள் ,அவர்களின் உதவி எந்த விதத்திலாவது கிடைக்கும். அவர்களின் காலடிச்சுவடுகளைப் பின்பற்றி அவர்கள் சொன்ன பாதையில் நடந்து நாமும் இறைவனை அடைய அவர்கள் அருளிச் செய்த ஆன்மீக,யோக வழிமுறைகள்,வாழ்க்கை மற்றும் ஆன்மிகம் சார்ந்த தத்துவங்கள் இவற்றைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து எல்லோரும் ஆன்ம உயர்வு பெற இறையருளையும் ,சித்தர்கள்,ரிஷிகள் குருமகான்களின் அருளாசிகளையும் வேண்டி இந்தப் பதிவைச் சித்தர்கள் சொன்னவை என்ற பெயரில் துவங்குகிறேன் .இது பாகம் ஒன்று இரண்டு என ஒவ்வொன்றாக வெளிவரும்.
பதினெண் சித்தர்கள் காப்பு பாடல் :-
நந்தீசர், அகத்தீசர், திருமூலர், புண்ணாக்கீசர்,புலத்தீசர்,பூனைக்கண்ணார், இடைக்காடர், போகர், புலிப்பாணி , கருவூரார்,கொங்கணவர், காலாங்கிநாதர், அழுகண்ணர், அகப்பைச் சித்தர், பாம்பாட்டி சித்தர், தேரையர் ,குதம்பைச் சித்தர்,சட்டை முனிவர் பதினெட்டு சித்தர்களும் அவர்களில் முதன்மையானவர்கள்.
வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!
M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

நந்தி அகத்தியர்மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
கந்திடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார் கொங்கணர் காலாங்கி அன்பிற்
சிந்தில் அழுகண்ணர் அகப்பையர் பாம்பாட்டி
தேரையரும் குதம்பயைருஞ் சட்டைநாதர்
செந்தமிழ்ச் சீர்சித்தர் பதினெண்பேர் பாதம்
சிந்தையுண்ணிச் சிரத்தணியாச் சேர்த்தி வாழ்வாம்.

சித்தர்கள் எண்ணற்றவர்கள் யுகம் உள்ளவரைத் தோன்றிய வண்ணம் இருப்பார்கள் என்றாலும் அவர்களில் பதினெட்டுச் சித்தர்கள் முதன்மையானவர்கள்.பதினெட்டுச் சித்தர்களும் மேலும் பல சித்தர்களும் அருளியுள்ள ஆன்மீக ரகசியங்களைப் படிப்படியாக பார்க்கலாம்.
வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!
M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com