Tuesday, 18 November 2014

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற,நினைவாற்றல் அதிகரிக்க உதவும் பயிற்சிகள்:-

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற,நினைவாற்றல் அதிகரிக்க உதவும் பயிற்சிகள்:-



எல்லா மாணவ,மாணவிகளும் நல்ல மதிப்பெண்கள் பெற இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன், வாழ்க வளமுடன்.

நாடிசுத்தி :-

உபயோகப்படுத்த வேண்டியது வலது கையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சை மென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும் வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும் அப்படியே செய்க.

1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலது மூக்குத் துவாரத்தை அடைத்து இடது மூக்குத் துவாரம் வழியாக உள்ளிருக்கும் பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே (இடது) மூக்குத் துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடது மூக்குத் துவாரத்தை அடைத்து வலது மூக்கு வழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின் அதே (வலது) மூக்குத் துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் ஒரு தடவை (சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரை செய்யலாம்.இதைக் காலை,மதியம் உணவுக்கு முன்,மாலையிலும் செய்து வர நல்ல நினைவாற்றல் ,மன ஒருமைப்பாடு ஏற்படும்.

பிராணாயாமம்:-

இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக,ஆழமாக  மூச்சை உள்ளிழுத்து பின்னர் இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக மூச்சை வெளியிடவும். இதைக் குறைந்தது 10 முறைகள் செய்யலாம்.

இதுவும் இரத்த சுத்தி செய்வதுடன்,சுவாசப்பைகளைப் பெரிதாக்கி சுவாசம் நன்றாக நடைபெற உதவுகிறது.மூளைக்கு நிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபக சக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும் முன் இதைச் சில தடவைகள் செய்து பின் படிக்க நன்கு மனதில் பதியும்.தேர்வுக்கு முன் ,நேர்முகத் தேர்வுக்குக்  காத்திருக்கும் போது சில தடவைகள் செய்யப் பதற்றம் தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய  மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாக எடுக்க உதவும்.

சீத்காரி :-

சீதளம் என்றால் குளிர்ச்சி   எனப்பொருள்.

பற்களைச்  சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.
இரவில் முறையாக உறங்காமல் அதிக நேரம் கண்விழித்துப் படித்தால்  கண் எரிச்சல்,உடற்சூடு,தலைசுற்றல் உண்டாகும்.தவிர்க்க முடியாத சூழல்களில் இந்தப் பயிற்சியை இடையிடையே செய்து படிக்க உறக்கம் வராது அதோடு நல்ல சுறுசுறுப்பும் சக்தியும் உண்டாகும்.
இந்தப் பயிற்சியை மழை மற்றும் பனிக்காலங்களில் அதிகம் செய்யவேண்டாம்.

தேர்வுக்கு முன் தேர்வு அறையில் செய்ய வேண்டிய பயிற்சி:-

தேர்வு தொடங்கும் முன் வினாத்தாள் கொடுத்ததும் கீழ்வரும் பயிற்சியைச் செய்ய மனதில் பயம்,பதற்றம் நீங்கி தெளிவு உண்டாகும் அதன் பின் விடைத்தாளில் பதில் எழுத ஆரம்பியுங்கள்.

பயிற்சி:-

மெல்ல மூச்சை உள்ளிழுத்து அடக்காமல் உடனே மெல்ல மூச்சை வெளிவிட்டு பின் 3 முதல் 6 செகண்டுகள் மூச்சை அடக்கி பின்னர் உள்மூச்சு இழுக்க வேண்டும்.இவ்வாறு ஒரு வெளிமூச்கிக்கும் உள்மூச்சுக்கும் இடையே 3 முதல் 6 செகண்டுகள் மூச்சை அடக்கி பின் உள்ளிழுக்கும் இந்த பயிற்சியை குறைந்தது 10 தடவை செய்து வர மனம் அமைதியாகும்.ஏதேனும் ஒரு கேள்விக்கு பதில் தெரிந்தும் நினைவுக்கு வராத சமயத்திலும் இதை குறைந்தது 3லிருந்து 5 தடவை செய்து பின் யோசிக்க விடை மனதில் உதிக்கும்.

முக்கிய குறிப்பு :-
நம் சரீரத்தில் சுவாசம் எப்பொழுதும் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை வலது பக்கம் ,இடது பக்கம் என மாறி மாறி ஏதேனும் ஒரு மூக்குத் துவாரம் வழியாக இயங்கும்.

வலது பக்கம் சுவாசம் ஓடும் போது கடினமான கணிதம்(MATHS) , அறிவியல் (SCIENCE),புள்ளியியல்(STATISTICS) போன்ற பாடங்களைப் படிக்க எளிதில் விளங்கும்,மனதில் பதியும். வலதுபக்கம் சுவாசம் ஓடாத நேரங்களில் வலது கால் இடது கால் இருக்கும் படி போட்டுகொண்டு தரையில் அமர்ந்தோ,சேரில் அமர்ந்தோ படித்தாலும் அதே பலன் உண்டாகும்.

வல்லாரை லேகியம் சிறிதளவு தினமும் சாப்பிட்டு வர நல்ல நினைவாற்றல் உண்டாகும்.


ரெய்கி மற்றும் சில தியான முறைகள் நினைவாற்றல் பெருக பேரளவில் உதவும்.அவற்றை விளக்கினால் பதிவின் நீளம் கூடும் என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நன்றி.

மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் தொலைபேசி எண்ணிற்கு அல்லது மெயில் ID யில்  தொடர்பு கொள்க.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M.
சூர்யா
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com



Tuesday, 11 November 2014

ஸ்ரீ அகஸ்தியர் ஸ்துதி

                     ஸ்ரீ அகஸ்தியர் ஸ்துதி



   ஓம் ஸ்ரீ ஸ்ரீ சத்குரு ஸ்வகுரு அகஸ்திய குருப்யோ நமஹ
            ஓம் ஸ்ரீ ஸ்ரீ குருபத்னி லோபாமுத்ராயை நமஹ 
           அரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை

சித்தர்களில் முதன்மையானவரும்,ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாடல்களின் மூலம் வைத்தியம்,ஜோதிடம்,மந்திரசாஸ்திரம் முதலான பல கலைகளைப்பற்றி இவரைப்போல் தெளிவுபட விளக்கியவர்கள் இலர்.                         ஸ்ரீ அகஸ்தியர் எனது மானசீக குரு.

நான் இயற்றி அன்றாடம் கூறி வரும் ஸ்ரீ அகஸ்தியர் துதியைக் கீழே கொடுத்துள்ளேன். 
தலை உச்சியில்(சஹஸ்ராரத்தில்) கீழ்க்கண்ட குரு வந்தன முத்திரையைப்  போட்டபடி  இந்த ஸ்துதியை ஜெபித்து யோகம்,தவம்,தியானம்,மந்திரஜபம் செய்து வர அவற்றில் சித்தி கிடைக்கும். 
குரு வந்தன முத்திரை என்ற ம்ருகி முத்திரை 





ஸ்ரீ அகஸ்தியர் ஸ்துதி:- 

1.தமிழ் மொழிக்குக்
 கர்த்தாவும்
2.வைத்தியம்,ஜோதிடம்,மந்திரங்கள் குறித்துத் தமிழில் பல நூல்கள் இயற்றியவரும்       
3.முருகப்பெருமானிடம் பிரணவ மந்திரோபதேசம் பெற்ற முனிசிஷ்யரும் (முனி ச்ரேஷ்டரும்)
4.சண்முகப்ரியரும் 
5.சக்திதாசரும்
6.பொதிகைமுனி,கும்பமுனி,குறுமுனி,குருமுனி என்றழைக்கப்படுபவரும்
7.ராவணேஸ்வரரை வீணையால் வென்றவரும்
8.புலஸ்தியர்,தேரையர் போன்ற சித்தர் பெருமக்களின் குருநாதரும்
9.சிவபெருமான்,அன்னைபார்வதி திருமணத்தின் போது பூமியின் வடபாகம் தாழ்ந்து தென்பக்கம் உயர்ந்ததைச் சமன் செய்தவரும்  
10.ஸ்ரீ ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசம் செய்தவரும்
11.சாக்த உபாசனா சிகரமும்
12.ஸ்ரீ வித்யா உபாசனையில் துதிக்கப்படுபவரும் 
13.ஸ்ரீ ஹயக்ரீவரால் ஸ்ரீ வித்யா உபதேசமும் ,ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமமும் உபதேசிக்கப்பட்டவருமான  
    ஸ்ரீ அகஸ்திய குருவே உங்கள் திருவடிகளும்,அன்னை ஸ்ரீ லோபாமுத்திரையின் திருவடிகளும் அடியேன் சிரமீதிருந்து எல்லா நேரங்களிலும்,எல்லா இடங்களிலும், எல்லாத்தொழில்களிலும், பாதுகாப்பாகவும்,வழிநடத்துவதாகவும்,உறுதுணையாகவும் இருந்து  வாழ்விலும்,ஆன்மீகத்திலும் உயர்வு தந்து காத்தருள வேண்டுகிறேன்.

திருநெல்வேலி -பாபநாசம்-அகஸ்தியர் அருவியின் மேல் உள்ள கல்யாணி தீர்த்தம் என்ற புனித ஸ்தலத்தில் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குரு ஸ்ரீ அகஸ்தியர் -அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா விக்ரஹம்.             



வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

M. சூர்யா
தச்சநல்லூர்,திருநெல்வேலி
ms.spiritual1@gmail.com
9442193072 / 9788493072 

Monday, 10 November 2014

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - பாகம் 3 - மனம்

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்  - பாகம் 3 -  மனம் 




முந்தைய பதிவுகளில் இரண்டு தளங்களான உடல்,ப்ராணன் பற்றி ஓரளவு தெளிவு பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன்.இப்பொழுது அதற்கு அடுத்த தளமான மனம் பற்றி பார்க்கலாம்.

பிராணனை விட அதி நுட்பமான சக்தி நிறைந்த அடுக்கே மனம்,மனம் செயல்படும் வரை மட்டுமே நம் உடலில் உயிர் நிற்கும்.

உதாரணமாக:-
உடல்+மனம் = உயிர்
உடல்-மனம் = பிணம்

கோமா நிலையில் உள்ளவர்களுக்கும் கூட மனம் உறக்க நிலையில் இருக்கும்.மனம் அறவே தன் செயல்பாட்டை நிறுத்தி விட்டால் மரணம் ஏற்படும்.

இத்தனை அவசியமான யாவற்றையும் அறியவும்,அறிந்ததை நினைவில் இருத்தவும்,அவற்றைத் தேவையான தருணங்களில் நினைவு கூர்ந்து செயல்படவும் மனமே அவசியம்.மனம் இன்றி எதுவும் செய்ய முடியாது.

அநேகர் மனதை அடக்க வேண்டும் என்று கடினமாக முயற்சிக்கின்றனர் அப்படி அடக்கினால் மட்டுமே இறைவனை அறியவும்,ஆன்மீகத்தில் உயரவும் முடியும் என்று நினைக்கின்றனர்.உண்மை அதுவல்ல.மனதை அடக்க முடியாது அப்படி அடக்கியதாக நினைத்துக் கொண்டாலும் அது தற்காலிகமானதுதானே தவிர நிரந்தரமல்ல.

மனம் தன் இயல்பில் வெறும் களிமண் போன்றது அது  நன்மையானதோ தீமையானதோ இல்லை அது நடுநிலையானது.நாம் வாழும் முறையில் இருந்தே அது தன்னை சரியாகவோ,தவறாகவோ வடிவமைத்துக் கொள்கிறது.

உதாரணமாக நாம் ஒரு நபரை அடிக்கின்றோம் நாமே இறுதியில் வெற்றி பெற்றோம் என வைத்துக்கொள்வோம்.இதில் நமக்கு அந்நியமான ஒருவரை தாக்கி வெற்றி பெற்றோம்.இதற்கு பதிலாக கண்ணாடியில் தெரியும் நம் உருவையே எதிரியாக பாவித்து அதை தாக்கினால் நம் கைகளில் கண்ணாடி உடைந்ததால் காயம் ஏற்படுமே தவிர அந்த உருவம் எந்த பாதிப்பும் இன்றி முன்போலவே இருக்கும்.அதுபோல நாம் மனதை வலிந்து அடக்கினால் மூளைக்கோளாறு,இயல்பாக வாழமுடியாமல் போய் வாழ்வே சாபமாகும்.

நண்பன் நம் சொல்லை கேட்பானா அல்லது எதிரி நம் சொல்லை கேட்பானா.நண்பனே கேட்பான்.எனவே முதலில் செய்ய வேண்டியது முறையான பயிற்சிகளின் மூலம் மனதை நட்பாக்கிக்  கொள்ளவேண்டும்.

மனதை ஏதோ எதிரியாகவும்,மிக தவறானதாகவும் பார்ப்பதை நிறுத்தவேண்டும்.இயற்கையில் ஒவ்வொரு செயலுக்கும் சரியான எதிர் வினை உண்டு எனவே மனதை எதிரியாக நினைத்தால் அது உங்களிடமும் எதிர் இயல்பாக செயல்பட்டு இணக்கமற்ற சூழலை உண்டாக்கும்.

மனம் அதன் செயல்பாடுகள் பற்றிய தெளிவு இல்லையென்றால் சரியாக ஆன்மீகப் பயணத்தைத்  தொடங்கி நடத்தவோ,வாழ்வில் துன்பங்களில் இருந்து விடுபடவோ முடியாது.


கர்மவினை:-
கர்ம வினை மூன்று வகை.

1.சஞ்சித கர்மா
2.பிராரப்த கர்மா
3.ஆகாம்ய கர்மா

1.சஞ்சித கர்மா - மனிதனாய்,மிருகமாய்,மரமாய் என பல்லாயிரம் பிறவிகளில் நாம் பிறந்து வாழ்ந்த வாழ்வில் செய்த புண்ணிய பாவங்களின் சேர்க்கையே சஞ்சித கர்மா.

2.பிராரப்த கர்மா - இந்தப் பிறவியில் அனுபவிக்கக் கொண்டு வந்த  வினைகள் .

3.ஆகாம்ய கர்மா - இந்த ஜென்மத்தில் புதிதாக சேர்க்கும் வினைகள்.

உதாரணமாக:-

சஞ்சித கர்மா எனப்படும் முற்பிறவிகளில் நீங்கள் செய்த நன்மை தீமைகளின் கணக்கு 80,000 நன்மைகள் 20,000 தீமைகள் என்று வைத்துக்கொள்வோம்.மொத்தம் 1 லட்சம் பதிவுகள்.

எப்படி 3 வேளைக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் உண்ண முடியாதோ அதுபோல் பல ஜென்மங்களில் செய்த கர்மாக்களை மொத்தமாய் இந்த ஒரு  பிறவியிலேயே கழிக்கமுடியாது.எனவே   அதில் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் எடுத்துக்கொண்டு (உதாரணமாக:ஒரு பத்தாயிரம் பதிவுகள்=8,000 நன்மைகள்,2,000 தீமைகள்) இந்த ஜென்மத்தை அனுபவிக்கப் பிறந்து வருகிறோம் இது பிராரப்த கர்மா.

இந்த ப்ராரப்த கர்மாவில் உள்ள பதிவுகளின்படி நன்மை ,தீமைகள் நம் வாழ்வில் நடக்கும்.அவை நடப்பதற்கான சூழல்,மற்றும் எண்ணங்களை ஏற்படுத்துவதே கிரகங்கள் மற்றும் தெய்வங்களின் வேலை.
எனவே தெய்வங்களையோ நவக்ரஹங்களையோ திட்டுவதோ, குறை கூருவதோ கூடாது.நாம் கொண்டு வந்த நமது சொந்த (கர்மா) செயல்களுக்கான பலன்களை நாம் அனுபவித்துக் கழிக்க உதவுகின்றனரே அன்றி நம்மை வதைப்பது அவர்களின் நோக்கமல்ல.உதாரணமாக:நாம் பூர்வ ஜன்மத்தில் ஒருவருக்கு மோசமான  உடல்நிலையால் பாதிப்படைந்த சமயம் உதவி செய்திருக்கிறோம் என்றால் நமது ப்ராரப்த கர்மத்தில் அந்த பதிவு இருந்தால் அதற்கான நன்மை நமக்கும் தேவையான நேரத்தில் யாரிடமேனும் இருந்து உதவி வரும்.இதுபோல் நன்மை தீமைகளை அடையச் செய்வதே கிரகங்கள் மற்றும் தெய்வங்களின் வேலை.எனவே அவர்களுக்கு கர்ம தாதா எனப்பெயர்.

இங்கு தான் நாம் சரியாகப்புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் வருகிறது.
பிறப்பு எடுத்து வந்தது முன்வினையில் ஒரு பகுதியை கழிக்க ஆனால் நாம் இந்தப் பிறவியில் மேலும் வினைகளை கூட்டவே செய்கிறோம்.அப்படி கூடும் வினைகளுக்கே ஆகாம்ய கர்மா  என்று பெயர்.

உதாரணமாக:-

சஞ்சித கர்மா = 1 லட்சம் என்று வைத்துக்கொள்வோம்.
பிராரப்த கர்மா =10 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம்.
எஞ்சிய கர்மா சஞ்சிதத்தில் = 90000 இருக்கும்.

மனமுதிர்ச்சி இன்றியும் , இறை வழிபாடு என்ற பெயரிலும்  எந்த துன்பத்தையும் அனுபவிக்க மாட்டேன் அப்படி அனுபவித்தால் நீ என்ன வலிமையான தெய்வம் என்று இஷ்ட தெய்வத்தையோ இறைவனையோ குறை கூறி நிந்தனை செய்யும் அளவுக்கு மன முதிர்ச்சி இன்றி குழந்தைகளாகவே இருக்கிறோம்.என்னதான் இறைவழிபாடு செய்தலும் சில கர்மாக்களின் பலனை நாம் அனுபவித்து தான் ஆகவேண்டும்.இறைவழிபாடு  அந்த கர்மாக்களைத் தள்ளி வைக்கும் ஆனால் முழுமையாகக்  காப்பாற்றாது இன்றில்லாவிட்டால் இன்னொரு நாள் அவற்றை அனுபவித்தே தீர வேண்டும்.தவமும் தியானமும் மட்டுமே அவற்றைக்  கடக்க உதவும்.

நமக்கு சிறு வயது முதலே நம் பெரியவர்கள் மற்றும் சமுதாயத்தால் அனேக விஷயங்கள் இப்படி,இதெல்லாம் செய்யக்கூடாது  எனக் கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்படி, எதைச் செய்யவேண்டும் ,சரியாக வாழ்வது எப்படி கற்பிக்கக்  கூடியவர்கள் நம் குடும்பத்திலோ,வெளியிலோ யார் உள்ளார்கள் என்று தேடித்தான் பிடிக்க வேண்டும்.

அடுத்த  பதிவில் இதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

M.சூர்யா-தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் -பாகம் 2 -பிராணன்

வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - பிராணன் 




முதலில் பிரதான அடுக்கான உடல்  பார்த்தோம். அடுக்கான பிராணன் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
 உடலில் உயிர் நிலைக்க பிராணன்  அவசியம். நல்லவன்,கெட்டவன், உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என வேறுபாடின்றி யாவரும்  உயிர் வாழ்வது  பிராணனின் உதவியால் தானே.
இறைவழிபாடு,தியானம் செய்வதன் மூலம்  அதிக சக்தி பெறுகிறோம்.ஆனால் அந்த சக்தி நம்மிடம் பொருளாக வரவில்லை.சக்தி அலைகளாக வருகிறது.எனவே கண்ணால் காண முடியவில்லை.அந்த சக்தி  உடலில் எங்கேனும்,அல்லது வேறு எங்காவது வைத்துக்கொள்ளலாம்.அது  அப்படி வராமல் சக்தி அலைகளாக  பிராண சரீரத்தில் சேர்கிறது.எனவே பிராண சரீரம்  வலுவாக இருந்தால் மட்டுமே  வரும் சக்தியைச் சேமிக்கவும், தேவைக்கு அங்கிருந்து உபயோகப்படுத்தவும் செய்யலாம்.
உதாரணமாக ஒரு டம்ளரில் பெரிய பாத்திரத்தில் உள்ள  நீரை மேலிருந்து ஊற்றினால் அதில் மிக குறைவான நீர் மட்டுமே தங்கும்.வந்த தண்ணீர் அதிகம் ,நீர் ஊற்றப்பட்ட கிளாஸ்  மிக சிறியது .அது போல் உணவு,உணர்வு இவற்றில் முறையின்றி வாழும் நம்முடைய பிராண சரீரம் போதிய வலுவின்றியே இருக்கும்.


புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபோகும் முன் எப்படி அந்த வீட்டை ,தூசி தட்டி வெள்ளை அடித்து  வாழத் தகுந்ததாக்கி அதன் பின் குடியேறுவோமோ அது போல் முதலில் நாடிசுத்தி என்ற பயிற்சி செய்ய வேண்டும்.நமது உடலில் 72000 நாடி நரம்புகள் இருப்பதாக யோகசாஸ்திரம் கூறுகிறது.நாடி சுத்தி பயிற்சியின் மூலம் நாடிகள் தூய்மை அடைவதோடு ரத்தமும் சுத்தமாகும்.ஞாபக சக்தி கூடும்.முகத்தில் ஒளி உண்டாகும். நாடிகள் சுத்தமாகாமல் குண்டலினி யோகப் பயிற்சியில் இறங்கக்கூடாது என யோகநூல்கள் சொல்கின்றன.

நாம் அனேக தடவைகள் சில உறுதிமொழிகளை, குறிப்பாக ஒவ்வொரு புத்தாண்டின் போதும் அநேக முடிவுகளை எடுக்கிறோம்  ஆனால் மறு நாள் தூங்கி எழுந்ததும் அவற்றை மறந்து விடுவோம்.அல்லது அவற்றை தொடர்ந்து செய்ய மாட்டோம்.இதற்க்கு காரணம் வைராக்கிய குறைவு நல்ல பிராணசக்தி உள்ளவர்கள் மிகுந்த வைராக்கியம் உள்ளவர்களாகவும் எந்த செயலையும் சிறப்பாக செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இன்று அநேகர் பிராணசக்தியைக்  கொண்டு பல அற்புதங்கள் செய்கிறார்கள்.பிராண சக்தியினால் வியாதிகளைக்  குணமாக்குகிறார்கள்.

நாம் இயல்பாகவே உள்ளே இழுக்கும் மூச்சை விட அதிக  மூச்சை வெளியே விடுகிறோம்.                                                                                                          


நாம் இயல்பாகவே உள்ளே இழுக்கும் மூச்சை விட அதிக  மூச்சை வெளியே விடுகிறோம்.புது இரண்டு சக்கர வாகனம் எடுத்தவுடன் குறிப்பிட்ட கிலோமீட்டர் வரை 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் அப்போதுதான் அதற்கு  அதிக மைலேஜ் கிடைக்கும்.அதுபோல் நாடிசுத்தி மற்றும் பிராணாயாமம் செய்து வர வர அதிக சுவாசம் உள்ளே சென்று குறைந்த சுவாசம் வெளிச் செல்லும்.நமக்கு நிறைய பிராண சக்தி கிடைக்கும்.   


பிராண சரீரத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள்  :-

நாடிசுத்தி :-

உபயோகப்படுத்த வேண்டியது வலது கையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சை மென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும் வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும் அப்படியே செய்க.

1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலது மூக்குத் துவாரத்தை அடைத்து இடது மூக்குத் துவாரம் வழியாக உள்ளிருக்கும் பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே (இடது) மூக்குத் துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடது மூக்கு துவாரத்தை அடைத்து வலது மூக்கு வழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின் அதே (வலது) மூக்குத்  துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.

இப்படிச் செய்தால் ஒரு தடவை(சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரை செய்யலாம்.இதைக் காலை,மதியம் உணவுக்கு முன்,மாலை ,நள்ளிரவு என 4 வேளையும் செய்து வரப் ப்ராண சரீரம் மிக வலிமையுடன் திகழும்.
நாடி சுத்தியைக் குறைந்தது ஒரு மாதமாவது செய்து பின் மற்ற பிராணயாமப்  பயிற்சிகளைச் செய்தல் நலம்.

பிராணாயாமம்:-

இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக,ஆழமாக  மூச்சை உள்ளிழுத்துப் பின்னர் இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக மூச்சை வெளியிடவும். இதைக் குறைந்தது 10 முறைகள் செய்யலாம்.

இதுவும் இரத்த சுத்தி செய்வதுடன்,சுவாசப்பைகளைப் பெரிதாக்கிச் சுவாசம் நன்றாக நடைபெற உதவுகிறது.மூளைக்கு நிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபக சக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும் முன் இதைச் சில தடவைகள் செய்து பின் படிக்க நன்கு மனதில் பதியும்.நேர்முகத்தேர்வுக்குக் காத்திருக்கும் போது சில தடவைகள் செய்யப் பதற்றம் தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய  மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாக எடுக்க உதவும்.

கபாலபாதி:-

இரு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக மூச்சை இழுத்தும்,வெளியிடவும் செய்யவேண்டும். இதன் மூலம் கபாலம் எனும் தலையில் தங்கிய சளி வெளியேறும்.
ஒவ்வொரு வியாதி வரும் போதும் அது  நமக்கு முன்கூட்டியே
எச்சரிக்கை செய்துவிட்டுத்தான் வருகிறது.உதாரணமாகச் சளி பிடிக்கும் முன் தும்மல் வரும்,தொண்டையில் ஒரு மாதிரியான அரிப்பு வரும் அதை உணர்ந்து இந்தக் கபாலபதி பயிற்சியை 20 தடவை முதல் 30 தடவை வரை  செய்யச் சளி பிடிக்காது.இதைத் தொடர்ந்து செய்து வர சைனஸ் நீங்கும்.

சீத்காரி :-

சீதளம் என்றால் குளிர்ச்சி   எனப்பொருள்.

பற்களைச்  சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாகக் காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.

சீத்தளி:-

நாக்கைக் குழல் போல் மடித்து மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.

வெயிலில் எங்காவது அலைந்து நன்கு வியர்த்து விட்டால் வீடு அல்லது அலுவலகம் வந்து சேர்ந்ததும் இதைச்  செய்ய உடனே வியர்வை நிற்கும்.
உஷ்ணமான உடல் அமைப்பு கொண்டவர்கள் இந்தப் ப்ராணாயாமங்களைத்  தினமும் செய்து வர உடலில் அதிக உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.உஷ்ண தேகமானால் அதிக காமம் உண்டாகும்,சிறுநீரோடு விந்து,நாதம் வெளியேறும்,பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உண்டாகும் அவை யாவும் இந்தப் ப்ராணாயாமத்தினால் தீரும்.ரொம்பச் சோர்வாக உணரும் வேளைகளில் இதனைச் செய்ய உடனே சக்தி கிடைக்கும்.இரவில் கண் விழித்துப்  படிக்கும் மாணவர்கள் இதைச் சில தடவைகள் செய்ய உறக்கம் உடனே வராமல் தடுப்பதோடு உடலுக்கும் மனதுக்கும் சக்தியும் கிடைக்கும்.  
சீத்தளி,சீத்காரி இரண்டு ப்ராணாயாமங்களையும் மழை மற்றும் பனிக்காலங்களில் செய்ய வேண்டாம்.


பிரபஞ்ச ஆற்றல் ,பிராண சக்தி அதிகம் பெற பயிற்சி:-

நாக்கை ''ழ''  சொல்வது போல் மடித்து மேல் அன்னத்தில் படுமாறு வைத்துக்கொண்டு உச்சந்தலையில் உள்ள துரியத்தில் மனம் வைத்துத்  தியானிக்க வேண்டும்.இதை அதிகபட்சமாக 20 நிமிடங்கள் செய்யலாம் அதற்கு மேல் செய்யவேண்டாம்.

இந்த பயிற்சி அநேக யோகிகளால் பயிலப்பட்டது.இதனைச் செய்ய உடனடியாகப் பிரபஞ்ச சக்தி நம் தலை வழியே நமக்குள் இறங்குவதை உணரலாம்.இது கர்ம வினை சார்ந்த நம் சிந்தனையில் ஏற்படும் குழப்பங்களை நீக்கும்.நம் செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும்.சித்தர் தரிசனம்  உண்டாகும்.அநேக ஆன்மீக அனுபவங்கள் உண்டாகும்.


சித்தர்களின் சர சூத்திர நுட்பங்கள் :-
சுவாசம் எப்போதும் மூக்கின் இரண்டில் ஒரு துவாரத்தின் வழியாகவே நடைபெறும்.அது இரண்டு மணி நேரத்திற்கொருமுறை மாறும்.

வலதுபக்கம் சூரிய கலை ,இடது புறம் சந்திரகலை எனப்படும்.
இடம் வலமாக,வலம் இடமாக மாறும்போது சில நொடி,நிமிடம் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் சுவாசம் நடக்கும் அதற்குச் சுழுமுனை எனப் பெயர்.

 திங்கள்,புதன்,வெள்ளி,வளர்பிறை வியாழன்  நாட்களில் அதிகாலை 4 முதல் 6 மணிவரை இடது புறம் சுவாசம் நடக்கும்.

செவ்வாய்,சனிக்கிழமை,ஞாயிறு,தேய்பிறை வியாழன்   நாட்களில் அதிகாலை 4 முதல் 6 மணிவரை வலது புறம் சுவாசம் நடக்கும்.
பின் இரண்டு மணி நேரத்திற்கொருமுறை மாறும்.

சூரியகலை (வலது) நடக்கும் பொழுது செய்ய வேண்டிய காரியங்கள் :-

கடினமான வேலைகள் செய்யலாம்,உணவு உண்ண ,மலம் கழிக்க ,உடலுறவில் ஈடுபட,கடல் யாத்திரை போக,சண்டையிட,கஷ்டமான கலைகள் கற்க,குதிரை,மாடு முதலிய நாலுகால் விலங்குகள் வாங்க,மலை ஏற ,பளு தூக்க,நீந்த,பணம் கொடுக்கல் வாங்கல் செய்ய, அரசனை அல்லது பெரியமனிதர்களைக் காண,மருந்து சாப்பிட,செரிக்கக் கடினமான ஆகாரம் உண்ண,வைத்தியம் பார்க்க நன்று.

சந்திர கலை (இடது) நடக்கும் பொழுது செய்ய வேண்டிய காரியங்கள் :-

எல்லாச் சுப காரியமும் செய்ய நன்று.நீர் அருந்த,தீர்மானம் செய்ய,நகை செய்ய,நகை அணிய,புத்தாடை அணிய,திருமணம் பேச,பெண்பார்க்க, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள,வீடு கோயில் கட்ட,தர்மம் செய்ய,குளம்,கிணறு வெட்ட,வைத்திய சாஸ்திரம் கற்க,  மருந்து செய்ய,சாமான்கள் வாங்க,புதுவீடு குடிபுக,விதை விதைக்க,பாஷைகள் கற்க,நடனம்,பாடல் கற்க,நண்பர்கள் உறவினரைக் காண நன்று.

மேற்சொன்னவாறு காரியங்களை அந்தந்தக்  கலையில் சுவாசம் நடக்கும் பொழுதுகளில் செய்ய வெற்றியுண்டாகும்.

சுழுமுனை நடக்கும் பொழுது செய்யும் காரியம் தோல்வியடையும்.ஆனால் இறைவழிபாடு,தியானம் செய்ய மிகச்சிறப்பு.

சூரியகலையில் தம்பதியர் இணைந்தால் ஆண் குழந்தையும்,சந்திர கலையில் 
இணைந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.சுழிமுனையில் இணைந்தால் அலியாய்ப் பிறக்கும்.

ஏதேனும் வியாதி (உதாரணமாக :தலைவலி) ஏற்பட்டால் அது ஆரம்பித்த நிமிடம் எந்தப் பக்கமாகச் சுவாசம் ஓடுகிறது எனப் பார்க்கவும் அதற்கு அடுத்த பக்கத்தில் சுவாசத்தை மாற்றினால் அந்தக் குறிப்பிட்ட வியாதி நீங்கிவிடும்.

மேலே சூரிய கலை,சந்திர கலையில் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றிக்  கூறினேன்.உதாரணமாக,நமக்குச் சூரிய கலை நடந்து கொண்டு இருக்கிறது ஆனால் நாம் செய்ய வேண்டிய காரியம் சந்திர கலையில் செய்ய வேண்டியது .இதுபோன்ற தருணங்களில் என்ன செய்யலாம். அடுத்த பக்கம் மாறும் வரை எல்லா நேரங்களிலும் காத்திருக்க முடியாது.எனவே அதுபோன்ற சமயங்களில் நமக்கு வேண்டிய பக்கம் சுவாசத்தை மாற்றிக் கொள்ளலாம்.அதற்கான முறைகள் இதோ

சுவாசத்தை மாற்றும் முறைகள்:-
1.மூச்சு ஓடும் பக்க அக்குளில்(வலது பக்கம் எனில் வலது கை அக்குள்) ஒரு துண்டைச் சுருட்டி மடித்து வைத்துக்கொண்டு கையை பின்புறம் மடக்கிக் கொள்ளச் சில நொடிகளில் அடுத்த பக்கத்திற்கு சுவாசம் மாறும்.

2.காலை மடக்காமல் மூச்சு ஓடும் பக்கம்  சாய்ந்து படுத்து அந்தப் பக்கத்துக்  கையைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்தால் சில நொடிகளில் அடுத்த பக்கத்திற்கு மாறும்.

3.ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி,ஸ்ரீ புவனேஸ்வரி,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மந்திரத்தில் சித்தி பெற்றிருந்தால் அந்தச் சக்தியிடம் வேண்டினால் மூச்சு உடனே மாறும்.நான் இந்த முறையில் மூச்சை மாற்றுகிறேன்.

மேலே சொன்னவாறு ஒவ்வொரு பக்கம் மூச்சு ஓடும் பொழுதும் ,இழுக்கும் மூச்சை விட வெளிவிடும் மூச்சின் அளவு நமக்கு அதிகம்.அதுவும் சூரியகலையை விட சந்திர கலையில் அதிகமாக பிராணன் வீணாகிறது.எனவே யோகியர் சுழுமுனை அல்லது சூரிய கலையில் சுவாசம் வருமாறு வைத்துக்கொள்கிறார்கள்.இயல்பாக நஷ்டமாகும் பிராணன் போக பேசும் பொழுதும்,கடின உழைப்பின் பொழுதும் ,உடல் உறவு கொள்ளும் பொழுதும்,தூங்கும் பொழுதும் அதிகப் பிராணன் வீணானாலும் உறங்கும் நேரம் அதிகம் ஆகையால் உறக்கத்தின் போது பெருமளவில் பிராணன் நஷ்டமடைகிறது. எனவே சூரியகலையில் உறங்கினால் பிராண நஷ்டத்தைக்  குறைத்துக் கொள்ளலாம். அதற்கு இடது கையைத் தலைக்கு வைத்து இடது புறமாகச் சாய்ந்து படுக்க வேண்டும்.மதிய உணவிற்குப்பின் பெரும்பாலோர் உறங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அவர்களும் இவ்வாறு உறங்கினால் சீக்கிரம் உண்ட உணவு ஜீரணமாகும்.

மேலும் சூரிய,சந்திர ,சுழுமுனை இவற்றை பயன்படித்தி ஆரூடம் சொல்லலாம்,பிறக்கப் போகும் குழந்தை ஆணா,பெண்ணா என்று அறியலாம்,காணாமல் போன பொருள்,நபர்  வருமா வராதா மற்றும் அநேக காரியங்கள் செய்யலாம்.விவரித்தால் அதிகம் போகும் எனவே இத்துடன் முடிக்கிறேன்.

மேலும் பயிற்சிகள் கற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளவும்.

                               வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

M.சூர்யா, திருநெல்வேலி
9442193072 /9788493072
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
yogisway.blogspot.com