வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள் - பகுதி 1-உடல்
உடல்,பிராணன்,மனம்,ஆன்மா,பொருளாதாரம் என்ற ஐந்து நிலைகளிலும் பலமாக இருக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே அது ஒரு முழுமையான வாழ்வாக இருக்கும்.எண்ணிய யாவினையும் அடைந்து அனுபவித்து உயர மேற்கண்ட ஐந்து நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்.

லௌகீக வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் உயர விரும்புபவர்கள் அளவான சாப்பாடு ,அளவான தூக்கம்,அளவான பேச்சு இவற்றைப் பின்பற்றவேண்டும். ஏனென்றால் அதிகம் உண்பவர்கள் அதிகம் தூங்குபவர்களாகவும்,சோம்பேறிகளாகவும் மாறுகிறார்கள்.பின்னர் அதிகம் பேசுபவர்களாக மாறி வாழ்வில் எந்த நிலையிலும் உயர்வை அடையமாட்டார்கள்.
பசி,தூக்கம், காமம் இவை கடவுள் எல்லா உயிர்களுக்கும் இயற்கையாகவே கொடுத்தது.இவை யாவும் ஆசைகள் இல்லை தேவைகள்.இவற்றில் எதுவும் தவறு இல்லை.ஆனால் மிதமிஞ்சிய ,முறையற்ற செயல்பாடுகளே தவறு.
இயற்கையை நன்கு உற்று நோக்கினால் செடி,மரம்,விலங்குகள் என யாவும் பிறக்கின்றன ,வாழ்கின்றன, சாப்பிடுகின்றன, இனத்தைப் பெருக்குகின்றன பின்னர் மடிகின்றன .இயற்கையில் இதற்கு மனிதனைத்தவிர பிற படைப்புகளுக்கு மேலான அர்த்தமோ உயர்ந்த லட்சியமோ இல்லை. ஏனென்றால் அவைகளெல்லாம் அளவான சுதந்திரத்தோடு படைக்கப்பட்டவை.மனிதன் மாத்திரமே எல்லைஅற்ற சுதந்திரத்தோடும் ,இறைவன் எனும் விதையை தனக்குள் கொண்டும் படைக்கப்பட்டிருக்கின்றான்.அவ்வாறு இறைநிலை அடைந்த அநேகம் மகான்களும் சித்தர்களும் உலகெங்கும் எல்லாக் காலங்களிலும் தோன்றியவாறே உள்ளனர்.என் சக மனிதனுக்கு சாத்தியமானது எனக்கும் சாத்தியமே என உணர்ந்து வாழ்வைச் சரியாகவும்,முழுமையாகவும் வாழ்ந்து ,சில அப்யாசங்களை முறைப்படிக் கற்றுச் செய்து வர நமக்குள் உள்ள இறைவன் எனும் விதை மரமாகி நமக்கும் உலகுக்கும் பயன்பட வாழலாம்.அதற்கு உடல்,பிராணன்,மனம்,ஆத்மா,பொருளாதாரம் என எல்லா அம்சங்களிலும் சிறந்து விளங்கவேண்டும்.
சித்தர்கள்,மகான்கள்,தெய்வங்கள் என்போர் தவம் புரிந்து சக்திகளை அடைந்து சக்தி மயமாக இருக்கின்றனர்.நாமும் உடல், பிராணன்,மனம், ஆன்மா, பொருளாதாரம் என்ற நான்கிலும் சக்தி உடையவர்களாக விளங்கினால் அடைய முடியாத விஷயம் எதுவுமில்லை.
அதற்கு என்ன செய்ய வேண்டும்.மனம்,ஆன்மா என்று எவ்வளவுதான் பேசினாலும்,படித்தாலும் அவற்றைக் குறித்த நேரடி அனுபவம் அனேகமாக நம்மில் பலருக்கு பூஜ்ஜியம் தான்.உதாரணமாக ஒரு வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்றால் முதலில் பிரதான வாயில் கதவைத் திறந்து (MAIN GATE) பின்னர் வீட்டின் கதவைத் திறந்து உட்செல்வோம்.அது போலவே நமக்குக் கண்ணுக்குத் தெரியும் இந்த ஸ்தூல உடலில் இருந்து பின் நுட்பமான விஷயங்களுக்குச் செல்லலாம். உடல் அளவில் சக்தி பெற்று உடலைக்கடந்து ப்ராணனை, மனதை ,ஆன்மாவைப் புரிந்து கொள்ளலாம்.
உடலைத் திருப்திப்படுத்த நல்ல சாப்பாடு,நல்ல தூக்கம்,நிறைவான காமம் வேண்டும்.
மனதைத் திருப்திப்படுத்த நேசித்தல்,நேசிக்கப்படுதல்,புகழ் பட வாழ்தல் இவை வேண்டும்.நமக்குப் பிடித்த தொழில்,வேலை இவற்றைத் திறமையாகச் செய்து நன்கு பொருள் ஈட்டி புகழ்பட வாழ்ந்து அந்தப் புகழை, செல்வ நிலையை நன்கு அனுபவித்து உணர்ந்த பின்னர் அகந்தை (EGO )அழியும்.

முதலில் உடலில் இருந்து ஆரம்பிக்கிறேன்.
உடல் - பசி தூக்கம், காமம் :-
பசி,தூக்கம்,காமம் மூன்றும் கடவுளின் சொந்தத் தயாரிப்புகள் அவைகளின் மூலமே அவைகளை அனுபவித்துக் கடந்து செல்ல முடியும்.
பசி:
உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பினில் உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை நானிருந்து ஓம்புகின்றேனே -திருமூலர் திருமந்திரம்
உடலின் இயல்பே ஆரோக்கியம் தான் .வியாதி என்பது நம் உணவு, கர்மவினை,சூழல்,கவனக்குறைவு இவற்றின் காரணமாக வந்து போகும் ஒன்று.அருகில் உள்ள ஒரு இடத்திற்குச் செல்ல நாம் நடந்தே கூட சென்று விடலாம்.ஆனால்,தொலை தூரத்திற்குச் செல்ல வேண்டும் அதுவும் விரைவாய்ச் சென்று சேரவேண்டும் என்றால் விரைவாக செல்லக்கூடிய நல்ல நிலையில் உள்ள ஒரு வாகனம்தேவை.அந்த வாகனமே நம் உடல்.அதை எப்படிச் சரியாக வைத்துக்கொள்ளலாம்.

ஸ்தூல உடல் ரிஷிகளால் அன்னமயகோசம் என்றழைக்கப்படுகிறது அதாவது உணவாலும்,நீராலும் வளர்க்கப்படும் அடுக்கு/தளம் என்று பொருள்.
உண்ணும் உணவே நம் கண்ணுக்குத் தெரியாமல் மனமாக மாறுகிறது என வேதங்களும், உபநிடதங்களும் கூறுகின்றன.ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு குணம் உருவாகும்.எனவே அறுசுவையையும் அளவோடு சேர்த்துக்கொள்வதால் குணங்களில் சமநிலையைப் பேணலாம்.
உதாரணமாக:-
ஒரு மிளகாயை எடுத்துக்கொள்வோம்
ஒரு மிளகாயை எடுத்துக்கொள்வோம்
அது ஒரு ஜடப்பொருள் - ஸ்தூலம்
அதை உண்டால் அதன் சுவை காரம் என்று தெரியும் - அது சூட்சுமம்.
மிளகாயை உடல் செரித்துத் தேவையானதை ஈர்த்துக் கொண்ட பின் எஞ்சியது கழிவாகவும்,மனதில் கோபம் என்ற அம்சமாகவும் மாறுகிறது.-அதிசூக்குமம் - காரணம் )
உடல்,மனம்,ஆன்மா போல் எல்லாப்பொருளுக்கும்,உயிருக்கும் மூன்று தன்மைகள் உண்டு.
உருளைக்கிழங்கில் வாயு எனப்படும் வாதத்தின் அம்சம் கொண்டது.இவ்வாறு ஒவ்வொரு உணவுப் பொருளிலும் வாதம், பித்தம், சிலேத்துமம் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அம்சம் இருக்கும்.இவற்றில் வாதம் காற்றின் அம்சம்,பித்தம் நெருப்பின் அம்சம்,சிலேத்துமம் நீரின் அம்சம்.இயல்பாகவே நம் உடல் என்ன அம்சமோ அதை அறிந்து அதற்கு ஒத்துக்கொள்ளும் உணவு வகைகளை உண்ண வேண்டும்.
ஆயுர்வேதம் கூறுகிறது :-
நீங்கள் வசிக்கும் இடத்தில் வளரும் அல்லது உங்கள் வசிப்பிடத்தின் சூழலில் வளரும் பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துகொண்டால் அந்தச் சூழலில் வளரும் தாவரங்களில் இருந்து பெறப்படும் பொருட்கள் அப்பகுதியில் வாழும் மக்களின் உடலுக்கு மாறானதைச் செய்யாது.லங்கனம் பரம ஔஷதம் அதாவது நன்கு பசி ஏற்பட்ட பின்னர் உணவு உண்ணுதல்,உடலை கொழுப்புச்சதை அதிகமில்லாமல் ஸ்லிம்மாக வைத்துக்கொள்ளுவதன் மூலம் வியாதிகளைத் தவிர்க்கலாம். தேன்,பேரிச்சை,முந்திரிப்பழம் போன்ற எளிதில் கெட்டுப்போகாதவைகளை அதிகம் சேர்த்துக்கொண்டால் அது உடலை இளமையாக வைக்கும்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் -

முதலில் உண்ட உணவு நன்கு செரிமானமாகி நன்கு பசி ஏற்பட்ட பின் உணவு உண்டால் உடலில் நோயே வராது என வள்ளுவர் கூறுகிறார்.
திருமுருக கிருபானந்தவாரியார் ஒரு முறை சொன்னது:- ''பசி வந்த பின் வாயில் உணவை வைத்து பசி நிற்கும் முன்னமே கையை எடுத்து விடு உனக்கு வியாதி இல்லை ''.
நமக்கு வாழ்வில் பல தருணங்களில் குறைவான பசி ,அதிகமான பசி என பசியின் பல பரிமாணங்களைக் கண்டிருப்போம்.ஆனால் என்றாவது எத்தனையாவது கைப்பிடி உணவு உண்ணும்பொழுது பசி நின்றது என உணர்ந்திருக்கிறோமா ? அனேகமாக இல்லை என்பதே பதிலாக இருக்கும்.நாம் அளவு வைத்தோ அல்லது நேரம் பார்த்தோ உண்ணும் அளவுக்குப் பசியை உணர்ந்து அதன்படி உண்பதில்லை.பசியையும்,அது தீர்வதையும் உணர முற்பட்டால் தான் அதிகமாக உண்ணும் பழக்கத்தில் இருந்து விடுபட முடியும். எனவே டிவி பார்த்துக்கொண்டோ கவனம் இல்லாமலோ உண்ணாமல் அளவாகப் பசிக்கு மட்டும் கவனமாக உணவு அருந்த வேண்டும்.
இரவு உணவு 7 மணிக்குள் முடித்துவிட்டால் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் சீக்கிரம் எழுந்து விடலாம்.
உப்பு,புளி, காரம் இவற்றை அளவோடு சேர்த்துப் பழங்கள்,கீரைகள், தானியங்கள்,காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள இளமையும் ஆரோக்கியமும் நிலைக்கும்.
தூக்கம் :-
எப்படி உணவு உடலுக்குச் சக்தியளிக்கிறதோ அது போலவே தூக்கமும் சக்தியளிக்கிறது.தூக்கமும் ஒரு வகை சாப்பாடு தான்.இரவில் போதுமான அளவு தூங்கவில்லை என்றால் பகலில் சுறுசுறுப்புடன் வேலை செய்ய முடியாது.சக்தியைத்தரும் தூக்கத்தை முறையாகச் செய்யவேண்டும்.

சரியாகத் தூங்கும் முறை:-
எப்படி ஒரு டூவீலரை நிறுத்தி வைக்கும் போது அந்த வண்டி கியரில் இருந்தால் ஒவ்வொரு கியராக குறைத்து நியூட்ரளுக்கு கொண்டு வந்து நிறுத்துவோமோ அதைப் போல் பகல் முழுதும் ,இரவு தூங்கும் வரை உடலும் ,மனமும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.அதைப் படுத்தவுடன் உணர்வுடன் உடல் உறுப்புகளைக் கவனமாகத் தளர்த்தி நாம் படுத்திருக்கும் நிலையை உணர்ந்தவாறு தூங்கவேண்டும்.அப்படித் தூங்கினால் குறைந்த நேரம் தூங்கினாலும் அதிக சக்தி கிடைக்கும்.கனவுகள் குறைந்த ஆழ்ந்த நல்லுறக்கம் வாய்க்கும்.சரியாகத்தூங்காவிட்டால் உடல் சூடு அதிகமாவதுடன் காமம் மிகும்,செயல் வேகம் குறையும்,சோம்பல் உண்டாகும்.எப்படி உறங்கும் போது முறையாக உறங்கினோமோ அது போல் எழும் போதும் பதறி எழாமல் மெல்ல கை,கால்களை அசைத்து உடலைக் கவனித்தவாறே எழ வேண்டும்.

காமம்:-
எவ்வளவோ ஒழுக்க விதிகளை நம் முன்னோர்கள்,உலக மகான்கள் சொல்லியிருந்தாலும் பொய் சொல்லாதே,யாரையும் துன்புறுத்தாதே, திருடாதே,முறையற்ற காமம் தவறு என பல ஒழுக்க விதிகள் இருந்தாலும் காமம் என்ற விஷயத்தில் பலர் ஒருவரை மிஞ்சி இன்னொருவர் சிறப்பாக நடிப்பவராகக் காண்பித்துக்கொள்கிறார்களே அன்றி காமத்தில் தெளிவாக இருக்க முடியவில்லை.அது ஏன் என்று பார்க்கலாம்.
திருடாதே என்றால் நம் பொருளை ஒருவர் திருடினால் நமக்கும் இப்படித்தானே வருத்தம் உண்டாகும் என்று யோசித்தே உணரலாம்.
ஒருவரை அடித்தால் அவருக்கு வலிக்கும் நமக்கும் இப்படித்தானே வருத்தம் உண்டாகும் என்று யோசித்தே உணரலாம்.
ஆனால் இவற்றில் சரியாக இருக்கமுடிந்தாலும் காமத்தில் மட்டும் ஏன் முடியவில்லை.

இரண்டு பேர் காமம் கொண்டால் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தான் இருக்கிறார்களே ஓழிய வருத்தம் இல்லை .
ஒரு உதாரணச் சூழல் :- இரண்டு பேர் காமம் கொள்கின்றனர் .நல்லவன்,கெட்டவன்,யோகி,பெரியவர்,வாலிபர் என யார் அதைக் கண்டாலும் வேதனைப்படுவதோ,குற்றமாக உணர்வதோ இல்லை.எந்தப் புனிதமான கோயிலுக்கும் ,இமாலயத்திற்கும் சென்று காமத்தில் எது,என்ன தவறு உள்ளது என கேள்வி கேட்டாலோ,தியானம் செய்தாலோ அதற்குப் பதில் கிடைக்காது. இதனால் தான் எத்தனைப் புத்தகம் படித்தாலும் ,கேட்டாலும் காமம் குறித்த தெளிவு உண்டாவதில்லை ஏனென்றால் மனம் எப்பொழுதும் நிரூபணம் கேட்கும்.தத்துவம் கேட்காது.எனவே காமத்தை உணர ,கடந்து வர வேறு மாற்று வழிகள் இல்லை. பிறவிச் சித்தர்கள், ஞானிகள் விதிவிலக்கு. அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு மிகச் சிலரே தோன்றுகிறார்கள் அவர்கள் தங்கள் முற்பிறவிகளில் அவற்றைக் அனுபவித்துக் கடந்திருப்பார்கள்.
எனவே காமத்தைச் சரியாக அனுபவிக்காமல் ஆன்மீகத்தில் உயர முடியாது.ஜாண் ஏறினால் முழம் சறுக்கும்.
இந்து தர்மம் ஒரு சம்பூர்ண மார்க்கம் ,ஏனென்றால் கடவுள், வைத்தியம், ஜோதிடம்,காமம் என வாழ்வின் எல்லாத் தேவைகளைப் பற்றியும் நிறைவான விளக்கங்களும்,கிரந்தங்களும் ஞானப்பெருமக்கள் இயற்றி இருக்கின்றனர். சிறுவயதில் தோன்றிய காமத்தை 25 வயதிற்கு மேல் திருமணமான பிறகே அனுபவிக்கிறோம்.அத்தனை வருடம் அடக்கி வைத்திருந்த காமத்தைத் திருமணமான பிறகும் சரியாக அனுபவித்து அந்த அதீத ஆசையை நிதானத்திற்குக் கொண்டுவர வேண்டாமா?.

அதற்கு என்ன செய்யலாம்? மனைவியோடு காமம் கொள்ளும் போது உச்சகட்டம் அடைந்ததும் அந்த சுகானுபவம் எவ்வளவு நேரம் நீடிக்கிறது என்று அந்த நேரத்திலேயே கவனமாக உணரவேண்டும்.ஆரம்பத்தில் அடிக்கடி மறந்து விடுவோம் ஆனால் தொடர்ந்து முயற்சித்து அந்த சுகானுபவத்தைக் கவனிக்கக் கவனிக்கக் காமம் திகட்டி விடும்.உதாரணமாக ,ஒரு ஸ்வீட் கடையில் வேலைசெய்யும் ஒருவர் அடிக்கடி ஏதேனும் ஸ்வீட் எடுத்து சாப்பிட்டபடியே இருப்பார்.மேலும் ஆரம்ப நாட்களில் வீட்டிற்கும் அதிகம் எடுத்து வருவார்.காலப்போக்கில் தொடர்ந்து சாப்பிட்டதின் விளைவாக அவருக்கு அது திகட்டிப்போய் அருகிலேயே ஸ்வீட் இருந்தாலும் மனம் அதை சாப்பிடு,சாப்பிடு என்று அரிப்பதில்லை.அரிதாக விரும்பினால் உண்பார்.ஆனால் நாமோ சாகும் வரை ஸ்வீட்டின் மேல் அதீத பிரியம் உள்ளவர்களாக இருப்பதோடு ,இறந்தபின்னும் நமக்கு படைக்கிறார்கள்.
மேலும் கணவன் சேர்க்கை முடிந்த பின்னர் உடனே எழுந்து விடாமல் அதே நிலையில் சில நேரம் இருந்து இன்று ஓரளவு என் காமம் தீர உதவிய என் வாழ்க்கைத்துணையே உனக்கு நன்றி என்று மனதை அனாகதத்தில் வைத்து ஒருவர் மற்றவரை வாழ்த்த வேண்டும்.
பின்னர் நுனிநாக்கை மேலண்ணத்தில் வைத்து இறைவா எனது காமம் என்ற சக்தி நட்பாக,அன்பாக,கருணையாக மாற அருள் செய்வாயாக என வேண்டிப் பின்னர் எழுந்திருக்க வேண்டும்.
இந்த விதமாகச் செயல்பட்டு வர மனம் காமம் சார்த்த அதீத சிந்தனைகள் குறைந்து தெய்வநிலை பெறும்.இதனால் வாழ்வில் அவசியமான பல பெரிய காரியங்களைச் செய்யச் சக்தி உண்டாகும்.
முதல் மனிதனைக் கடவுள் படைத்தார்,பின்னர் தோன்றிய எந்த விலங்கையும்,மனிதனையும் அவரவர் மூலமாகவே படைக்கிறார்.எனவே காமம் தவறு இல்லை.இது குறித்த குற்ற உணர்ச்சி தேவை இல்லை. முறையாய் அனுபவித்து அந்தந்த வயதுக்கேற்ப வாழ்ந்தால் வயதாக வயதாக நம்மிடம் நல்ல முதிர்ச்சி உண்டாகும்.ஏனென்றால் காமம் குறித்த புரிதல் இன்மையே நமது (போலித்தனம்) நடிப்பிற்கு காரணம் என்று உளவியல் நூல்களும் நமது பண்டைய நூல்களும் கூறுகின்றன.
எனவே ஆன்மீகத்தில் நிச்சயமான உயர்வு பெற நமது உடல் மற்றும் உடல் சார்ந்த தன்மைகள் பற்றிய அடிப்படைத் தெளிவு பெறுதல் அவசியம்.
மிகவும் அருமையான தெளிவான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ஜீ. இது வரை இப்படிபட்ட கருத்துக்களை பின்பற்றி நடக்க வேண்டும் என்று தெரியாமல் இருந்திருக்கிறோம், இனி இவ்வழியில் நடக்கிறோம். நன்றி.
ReplyDeleteA must read content. Thank you sir.
ReplyDeleteஆன்மீகம் குறித்த சிறந்த விளக்கம். நன்றி. வாழ்க வளமுடன்.
ReplyDelete