Saturday, 18 June 2016

சித்தர்கள் சொன்னவை - 4





குடும்பவாழ்க்கை ஆன்மீக வாழ்விற்கு இடையூறா என்ற கேள்விக்கு அகஸ்தியர் கூறும் விளக்கம்.

இப்பாடல் அகத்தியர் பரிபூரணம் 1200 என்ற நூலில் உள்ளது.

அலைவார்கள் தேசாதி தேசங்கடோறும்
அணுவான தமர்வாசல் அறியாமலே தான்
குலையான பாவங்கள் செய்வார்களையா
குணமாகத் தன்னுயிர் போல் மண்ணுயிர்காரார்கள்
வலையான மோகவலை தன்னிலுறவாகி
மதியான மதிகெட்டு மாழுவார் மண் மீதில்
கலையான யிருகலையும் ஒருகலையாய்ப்  பாரார்
காமவலை தன்னில் விளையாடுவார்கள் பாரே                          - பாடல்  26

பாரப்பா யிந்தமதியாலே லோகம்
பக்குவங்களறியாமல் பெண்ணாசையாலே
வீரபா கொண்டுமதி யலைந்தே போனார்
மெய்யான பெண்ணுடனே வாழ்ந்தாலென்ன
காரப்பா தன்தாரம் தாரமதுவகி
காசினியில் மறுதாரம் தாய் போலே யெண்ணி
நேரப்பா நின்றதினால் காயமது சித்தி
நினைவு தப்பி ந்ன்றதினால் காயமது போச்சே                            -பாடல் 27

   
இறைவனைத் தேடி உலகம் முழுக்கச் சுற்றி காலத்தை விரயம் செய்யாமல் நம்முள் இறைவன் வாழும் இடத்தைக் குருமுகமாக உபதேசம் பெற்று அதில் தவம் செய்து வர மனம் அடங்கிப் பாவகர்மங்கள் அழியும்.அதன் பலனாக இறைவனை உணரும் பேறு கிட்டும்.இதல்லாமல்,மந்திர உச்சாடனங்கள், சித்துக்கள்,செல்வம்,சக்திகள் பல பெற்றாலும் அதனால் காமத்தை உணர்ந்து தெளிவு பெறவும்,மனம் அடங்கப் பெறுதலும் இயலாது.உதாரணமாக  ராவணன்,விஸ்வாமித்ரர் போன்றவர்களின் கதைகளை நாம் அறிவோம்.

எனவே,தன் மனைவியை மனைவியாக நினைத்தும்,மற்ற பெண்களைத் தாயகப் பாவித்தும் யோகம் செய்து வந்தால் ஆன்மீக முன்னேற்றம் உண்டாகும்.எனவே, இல்லறத்தில் இருந்துகொண்டே உணவு, உடலுறவு, உறக்கம் இவற்றில் சித்தர்கள் கூறியபடி அளவுமுறை,நெறிமுறை அறிந்து வாழ்ந்து யோகப் பயிற்சிகள் செய்து வருதல் வழிதவறாமல் இருக்க உதவுவதாக அகத்தியர் கூறுகிறார்.


வாழ்க வையகம்!!   வாழ்க வளமுடன்!!

M.சூர்யா தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment